அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது!

Report Print Yathu in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி,

எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டாத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கர்த்தாலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் கதவடைப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

எமது அரசியல் பிரதிநிதிகள் எமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் அறியாது அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தி போராடவோ, காணாமல் போகவோ இல்லை.

இந்த நிலையில் அவர்கள் எமது பிள்ளைகளை காணாமல் நாம்படும் வேதனைகளை அறியாதவர்களாகவே உள்ளனர். அதனால் அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என நாம் நாடு நாடாக சென்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசிற்கு கால அவகாசத்தை வழங்கும் வகையில் செயற்படுகின்றனர்.

2017, 2018ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் எதையும் செய்யவில்லை. கால அவகாசத்தையும் அரசுக்கு வழங்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபாய அவர்களின் காலத்தில்தான் எமது பிள்ளைகளை நம்பி இராணுவத்தினரிடம் ஒப்படைத்தோம். அதைவிட வீடுகளில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள், வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் என பலர் காணாமல் செய்யப்பட்டுள்ளனர்.

எமக்கு நட்டஈடுகளோ, உதவிகளோ தேவை இல்லை. எமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும். அதற்கு சர்வதேசம் அரசுக்கு கடுமையான இறுக்கப்பாடுகளை விதிக்க வேண்டும்.

கால அவகாசம் வழங்க கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். வடக்கிற்கு வருகைதந்த பிரதமர் மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்தார்.

ஜனாதிபதியும் ஒரு சந்தர்ப்பத்தில் கசப்பான விடயங்களை விடுவோம் எனும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். எதையும் மறந்து மன்னிக்க முடியாது.

தொலைந்த பிள்ளைகளை மீட்கும்வரை எமது தமிழ் தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Latest Offers