கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை

Report Print Mubarak in சமூகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்கும் 15 மாணவர்களுக்கு இந்த வாரம் தொடக்கம் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமாக பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை வளாகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் விளக்கமறியலில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers