பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கவனக் குறைவு! பாதிக்கப்படும் மக்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழமையாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீன்கள் மற்றும் மீன்கள் விற்கப்படும் இடங்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.

இருப்பினும் தூர இடங்களில் இருந்து கிராமங்களுக்கு வாகனங்களில் வரும் மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்வதற்கு முன்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதிகளில் விற்பனைக்காக கொண்ட வரும் மீன்களை சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்வதில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நகரை அண்மித்த பகுதிகளான மொரவெவ, கோமரங்கடவல, றத்மலை மஹதிவுல்வெவ போன்ற பிரதேசங்களுக்கு பாவிக்க முடியாத பழுதடைந்த மீன்களையும் விற்பனை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இவ்வாறு பழுதடைந்த மீன்களை விற்பனை செய்வதன் காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தூர இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers