காட்டு யானை தாக்கியதில்கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கும் கூலித்தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மேலும் கிருஷ்ணபிள்ளை பஞ்சாயுதம் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாடுகளை மேய்பதற்காக சென்ற நிலையிலேயே காட்டு யானை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers