முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை சிறப்பாக அனுஸ்டிப்பதற்காக கலந்துரையாடல் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் பொதுமக்களின் தலைமையில் இம்முறை அனுஸ்டிப்பதற்கான பல்வேறு கலந்துரையாடல்கள், முள்ளிவாய்க்கால் பகுதியில் அன்மைய நாட்களாக நடைபெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது செயற்பாடு குழு ஒன்றையும் தெரிவுசெய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் செயற்பாடு குழுவிற்கு தலைமை ஏற்கும் வகையில் பெண்கள் உள்ளிட்ட 12 பேரை உள்ளடக்கிய செயற்பாட்டு குழு ஒன்று இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களின் ஏற்பாட்டில் இதுவரை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் கூட்டங்களில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தமிழர் மரபுரிமைப் பேரவை, மாற்றத்துக்கான இளைஞர் அணி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பை முன்னாள் போராளிகள் இளைஞர் அமைப்புக்கள் வடக்குக் கிழக்கு மாணவர் ஒன்றியங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஒழுங்கமைப்பதற்கான கலந்துரையாடல்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers