சுகாதார பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பாடம் கட்டாயமாக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய தேசிய கல்வி நிறுவனங்களில் 2022ஆம் ஆண்டு முதல் குறித்த பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.