யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

வீதியில் விபத்துக்குள்ளான இளைஞனை தனது காரில் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த மகத்தான பணியை சாவகச்சோி நீதிவான் செய்துள்ளார்.

சாவகச்சோி நீதிவான் கோப்பாய் - கைதடி வீதி ஊடாக தனது கடமைக்கு சென்று கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்தினை அவதானித்துள்ளார்.

விபத்தில் 34 வயதான சி.வசந்தன் காயமடைந்த நிலையில் வீதியில் கிடந்தார்.

விரைந்து செயற்பட்ட நீதிபதி, தனது வாகனத்தில் அவரை ஏற்றி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தனது கடமைகளுக்கு சென்றிருக்கின்றார்.

நீதிபதியின் இச் செயற்பாடு குறித்து பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Latest Offers