இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்த இலங்கைக்கு தற்போது சூட்டப்பட்டுள்ள பெயர்

Report Print Rusath in சமூகம்

இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்பட்ட இலங்கை கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளி என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைபற்றி அவர் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

யுத்தத்தினால் கடந்த சுமார் 35 வருடங்கள் பாதிப்பை எதிர்நோக்கிய நிலையில் தற்போது மீண்டெழுந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை பற்றி கவனமெடுக்க வேண்டியுள்ளது.

இந்த மாகாணத்தில் இதற்கு முன்னர் சுற்றுலாத்துறை என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இங்கு வருகை தந்த வெளிநாட்டினர் கிழக்கு மாகாணத்திற்கு வரும் போது அவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கவில்லை.

அவர்கள் இந்தப் பிரதேசங்களில் யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்களைப் போக்குவதற்கான தொண்டு நிறுவனப் பணியாளர்களாகவே வந்திருந்தார்கள்.

எனினும் 2009ஆம் ஆண்டு இந்த நாட்டின் யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஏற்பட்ட சுமூகமான சூழ்நிலையை அடுத்து தான் முன்னேற்றம் வந்தது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உயிர்ப்பூட்டி அதன் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் கிழக்கு மாகணத்திற்குப் பெரும் பொருளாதார வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

கிழக்கு மாகாணம் உலக சுற்றுலாப் பயணிகளினதும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளினதும் கவனத்தை ஈர்ப்பதில் புகழ் பெற்றது என கூறியுள்ளார்.

Latest Offers