வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் நுழைவாயிலை மறித்து பொது மக்கள் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் நுழைவாயிலை மறித்து பொது மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த போராட்டம் இன்று காலை முதல்புன்னாலைக்கட்டுவன் வடக்கு பிள்ளையான் கட்டு மயானத்தில் உடலை தகனம் செய்யக் கூடாது என்ற நீதிமன்ற கட்டளைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த மயானத்திற்கு அருகில் அத்து மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள குடியிருப்புகளால் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படக் கூடாது என பிரதேச சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பிரதேசசபை செயலாளரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களின் பரம்பரை மயானமான இதிலேயே இறந்த உறவுகளின் உடலை காலம் காலமாக எரித்து வருகின்றோம்.

வேறு மயானத்தில் உடலை எரிக்குமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயினும் அதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எங்களுக்கு எங்களுடைய பரம்பரை மயானம் வேண்டும். இன்று நடைபெறவுள்ள பிரதேசசபை கூட்டத்தில் எமக்கான ஒரு தீர்வு எடுக்கப்பட்டு அது நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அனுமதிக்காவிடின்,எதிர்காலத்தில் இறந்தவர்களின் உடலை பிரதேச சபையில் எரிப்போம் என்றும்எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

மயானத்தில் தகனம் செய்வதற்கான அனுமதி கொடுக்காவிடின், தொடர்ந்தும் தாம்போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers