நிர்மாணப்பணிகளில் ஈடுபடும் 80வீதமானோர் போதைக்கு அடிமை

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணத்துறையில் பணியாற்றும் 80வீதமான தொழிலாளர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கிட்டலகம இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பின் பல பகுதிகளிலும் இடம்பெறும் நிர்மாணத்துறைப்பணிகளில் 10ஆயிரம் பேர் வரை பணியாற்றுகின்றனர். இதில் 1000 வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு தகவல் திரட்டலின்போதே இதில் 80 வீதமானோர் போதைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை நிர்மாணப்பணிகளின் அதிக வேலைப்பளு காரணமாகவே அவர்கள் போதையை நாடுவதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளதாக போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கிட்டலகம குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers