யாழில் 155வது பொலிஸ் வீரர்கள் தின நினைவுகூரல்

Report Print Sumi in சமூகம்

155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரட்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரட்ன தலைமையில்இன்று காலை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையில் கடமையின் போது இதுவரை 3,124 உத்தியோகத்தர்கள் உயரிழந்துள்ளனர்.

அவர்களின் நினைவாக மலர் தூவி, பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது. இதேவேளை, கடமையின் போது இதுவரை 1534 பேர் அங்கவீனமுற்றுள்ளனர்.

மேலும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 155 பொலிஸ் வீரர்கள் தினத்தின் பிரதான நிகழ்வு கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பிரதேசத்தில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers