மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பொலிஸ் வீரர்கள் தினம்

Report Print Kumar in சமூகம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ் அதிபர் நுவான் வெதசிங்க தலைமையில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டங்களின் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், மதத் தலைவர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையினை தொடர்ந்து உயிர் நீத்தவர்களுக்கான மரியாதையொழி எழுப்பப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

Latest Offers