வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் தினம் அனுஸ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்பராமாயணத்தை அரங்கேற்றிய நாளான இன்று வவுனியாவில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள கம்பரின் சிலைக்கருகில் நினைவு தின அனுஸ்டிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை வவுனியா நகரசபையும், தமிழ் மா மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது தமிழருவி த.சிவகுமாரன் மற்றும் தமிழ் மாமணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தனர்.

மேலும் இதில் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபையின் செயலாளர் இ.தயாபரன், உப தலைவர் சு.குமாரசுவாமி, தமிழ் மாமன்றத்தின் உறுப்பினர்கள், வைத்திய கலாநிதிகளான செ.மதுரகன், கிருபானந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers