போயா தினமான நேற்று மோசமான செயலில் ஈடுபட்ட நபர்! இரவோடு இரவாக சிக்கினார்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில் போயா தினமான நேற்று மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் இரவு எட்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 17 இற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers