ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்பின் நிலைப்பாடுகள்

Report Print Dias Dias in சமூகம்

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த அறிக்கை மிகவும் பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஐ.நாவின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நேற்றைய தினம் இலங்கை விவகாரம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வாசித்திருந்தார்.

அதன் பின்னர் தமது நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் குறித்த அமர்வில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் லங்காசிறிக்கு விசேட செவ்வியினை வழங்கியிருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தமது தரப்பு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்பின் நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், சிவில் சமூக பிரதிநிதி நவனீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழர் தரப்பு நிலைப்பாட்டினை எமக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest Offers