பாணந்துறையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்திற்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

பாணந்துறையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கெசெல்வத்தை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியிருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

முச்சக்கர வண்டி ஒன்றில் பாணந்துறை நோக்கி பயணித்த இருவருக்கும் வீதியில் நின்ற மற்றுமொரு நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

நடு வீதியில் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், வீதியால் பயணித்தவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவரும் கேட்ட போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்துடன் மேலும் சிலரும் தொடர்புபட்டுள்ளனர். இது குறித்து கெசெல்வத்தை நடமாடும் பொலிஸாரிடம் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதிரடி படையினரை அழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers