வவுனியாவில் 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த பொலிஸ் வீரர்கள் தினத்தில் யுத்த காலத்தில் உயிர் நீத்த பொலிஸாரும் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சர்வ மதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியாப் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Latest Offers