இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 27 பொதிகள்

Report Print Ashik in சமூகம்

தலை மன்னார் வெளிச்ச வீட்டிற்கு 5 கடல் மைல் தொலைவில் இருந்து பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவை இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளனதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 பொதிகளாக்கப்பட்ட 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கண்ணாடியிலை படகொன்றில் இவை கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இவற்றை கொண்டு வந்த சந்தேகநபர்கள் இருவரும் மன்னார், பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களும், பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளும் யாழ்ப்பாணம் சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers