புலிகளின் ஆயுதங்களை தேடி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்! இறுதியில்....?

Report Print Mohan Mohan in சமூகம்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றை இன்றையதினம் முற்றுகையிட்டு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தனியார் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள் மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணி தற்பொழுது நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers