இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டதை அறிந்திருந்த உயர் அதிகாரிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை முன்னாள் கடற்படை தளபதி ஜயந்த பெரேரா மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆனந்த குருகே உட்பட உயர் அதிகாரிகள் அறிந்திருந்தாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சாட்சியாளர்களின் சாட்சியங்களின் ஊடாக அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட லெப்டினட் கமாண்டார் சம்பத் தயானந்த என்ற சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த பக்கிசாமி லோநாதன் மற்றும் இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர் வான் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்கள் பயணம் செய்த வான் 72 துண்டுகளாக வெட்டப்பட்டு வெலிசர கடற்படை முகாமில் உள்ள வாகன திருத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Latest Offers