விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கீழே வீழுந்து மரணம்

Report Print Kamel Kamel in சமூகம்

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் திடீரென கீழே வீழ்ந்து மரணித்துள்ளார்.

மொரட்டுவ வேல்ஸ் குமார பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை கெசல்வத்த என்னும் பகுதியைச் சேர்ந்த சமித் துல்சர டி அல்விஸ் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்துள்ளான்.

மாணவன் ஏனைய மாணவர்களுடன் இணைந்து கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மாணவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தலையில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.