நியூசிலாந்து செல்ல முற்பட்ட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Report Print Vethu Vethu in சமூகம்

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்து செல்ல முயற்சித்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது படகு உரிமையாளர் உட்பட 8 பேர் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர்களுடன் இருந்த இராணுவத்தினர் இருவர் தலா ஒரு லட்சம் ரூபாயிலான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்ட 20 பேர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வெளிநாடு செல்ல முயற்சித்த குறித்த குழுவினர் 5 - 6 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் நீர்கொழும்பில் இருந்து நியூசிலாந்து நோக்கி பயணிக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலியை அண்டிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers