தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதில் பெற்றோர்கள் காட்டுகின்ற அக்கறையையும், ஊக்கத்தையும், விளையாட்டிலும் காட்டவேண்டும் என காரைதீவு பிரதேசசெயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான தவராசா லவன் தலைமையில் காரைதீவு இ.கி.ச.பெண்கள் பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
விளையாட்டுத் துறையால் உயர் தொழில் புரிகின்றவர்கள் எம்கண்முன்னே உள்ளனர். அதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அதிகாரிகள் உள்ளனர்.
கல்வியைப் போன்றே சரி நிகராக விளையாட்டுத்துறையும் விளங்குகின்றது. விளையாட்டினால் தேசிய சர்வதேச ரீதியில் புகழ் வாய்ந்தவர்கள் கிராமப்புறங்களில் சந்து பொந்துகளில் விளையாடியவர்களே எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ட்ரக்ஸ் அமைப்பின் தலைவர் எ.விவேகானந்தராஜா பிரபல சட்டத்தரணி என்.சிவரஞ்சித் கல்முனை இளைஞர்சேனா தலைவர் எ.டிலாஞ்சன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.