இலங்கை மரக்கறி மற்றும் பழங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி!

Report Print Mubarak in சமூகம்

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் மற்றும் பழங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக விவசாய அமைச்சு சகல விவசாய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

எனவே நாட்டில் மரக்கறி மற்றும் பழச்செய்கையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தென்கொரிய அரசு முன்வந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இந்த பழ செயற்றிட்டத்தினை மேம்படுத்த மாவட்ட விவசாய திணைக்களம் ஊடாக கம நல சேவை நிலையங்கள் மூலமாக விவசாயிகள் சிறந்த விதையினங்களை பெற்று பழச்செய்கைகளை மேம்படுத்த முடியும் எனவும் விவசாய அமைச்சு விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

Latest Offers