கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடுகளால் மாணவர்கள் அசௌகரியம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் குளவிகளின் தொல்லை காரணமாக நிலத்திலிருந்து பரீட்சை எழுதியுள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் இரண்டு பெரிய குளவி கூடுகள் காணப்பட்டதன் காரணமாக பரீட்சை எழுத முடியாத நிலையில் காணப்பட்டுள்ளனர்.

பரீட்சைக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளை விட்டு வெளியேறி நிலத்தில் இருந்து மாணவர்கள் பரீட்சை எழுதிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி மற்றும் குரங்குகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுவதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Latest Offers