வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக மதுபானசாலை! நகரசபை எடுத்த முடிவு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கபட்டுள்ள மதுபான நிலையத்தை அகற்றமுடியாமை தொடர்பாக குறித்த வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே நகரசபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மதுபான நிலையத்தை அகற்றவேண்டும் என இந்த சபையிலே நாங்கள் எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியாததை எண்ணிக் கவலையடைகின்றேன்.

இந்த உயரிய சபையில் நாங்கள் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது விடின் நாம் இங்கு இருப்பதில் பலன் இல்லை. எனவே இதற்கு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன்போது வவுனியா நகரில் பல கடைகள் சபையின் வியாபார அனுமதிப்பத்திரம் இன்றி இயங்குவதாகவும் அப்படியானால் அனைத்திற்கும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி பத்திரங்கள் இல்லாத மக்கள் நலன்சார்ந்த வியாபார நிலையங்களை விலக்களித்துவிட்டு மக்களிற்கு பாதகமான இவ்வாறான மது பான நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கமுடியும்.

இதன்போது பேசிய தலைவர் எமது சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும், ஆளுநருக்கும் அனுப்பிவைப்பதாக தெரிவித்திருந்தார்.

Latest Offers