காத்தான்குடியில் சிக்கிய ஹெரோயின் விற்பனைக் கும்பல்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்த வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் நான்கு பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers