சவூதியிலிருந்து கேரளாவுக்கு சென்ற இலங்கைப் பெண்ணின் சடலம்

Report Print Ajith Ajith in சமூகம்

கேரளாவில் இருந்து சவூதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்துக்கு பதிலாக நேற்று முன்தினம், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

29 வயதான ரபீக் என்பவர் சவூதியில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி மரணமானார்.

இந்த நிலையில் சடலத்தை பெற்று கொண்ட அவரின் குடும்பத்தினர் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன் திறந்து பார்த்த போது அதில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது.

பண்டார மெனிக்கே என்ற பெண்ணின் சடலமே அதில் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி சவூதியில் இடம்பெற்ற மாறுப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேநேரம் ரபீக்கின் சடலம் இலங்கைக்கு சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டது. இந்தநிலையில் அவரின் சடலத்தை கேரளாவுக்கு அனுப்பி வைக்கவும் பண்டார மெனிக்கேயின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers