புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் தவக்கால திருச்சிலுவை பாதை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் தவக்கால திருச்சிலுவை பாதை வழிபாடு இடம்பெற்றுள்ளது.

இவ்வழிபாடு புளியந்தீவு வட்டார மக்களின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது செப வழிபாடு, திருச்சிலுவை பாதை, சுற்றுப் பிரார்த்தனை மற்றும் விசேட திருப்பலி பூசை என்பன இடம்பெற்றுள்ளன.

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்கு தந்தையான அருட்தந்தை ரி.வி.அன்னதாசனினால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட்டாரப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.