கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை ஆரம்பம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய கண் சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது

இதில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்சிகிச்சைப் பிரிவினை திறந்து வைத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்த நோயாளர்கள் கண் சத்திர சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிற்கு சென்று சிகிச்சைகளை பெற்று வந்தனர்.

இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் இன்று இடம்பெற ஆரம்பித்துள்ளதால் பிரதேச மக்கள் அனைவரும் நன்மை பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர் திருவாகரன், அமைச்சின் பணிப்பாளர் கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - சுமன்

Latest Offers