அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 வீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You my like this video