பேருந்துடன் மோதிய மோட்டார்சைக்கிள்: இரு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் பேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை கட்டான பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 53 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தேங்காய் பறிப்பதற்காக நீளமான தடி ஒன்றினை மோட்டார்சைக்களில் எடுத்து சென்று கொண்டிருந்த வேளையில், வேக கட்டுபாட்டினை இழந்து மோட்டார்சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers