மனைவி மீது கோபம் - காருக்குள் வைத்து எரிக்கப்பட்ட கணவன்

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகலை பொலிஸ் பிரிவில் உள்ள வீதி ஒன்றில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த வாகனத்தில் பயணித்த நபர் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

50 வயதான டிப்போ வீதி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட மோதலினால் கெப் வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest Offers