பிரித்தானியா செல்ல முயற்சித்தவருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேர்ந்த நிலை

Report Print Steephen Steephen in சமூகம்

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த ஈராக் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான இந்த ஈராக் பிரஜையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஈராக்கில் இருந்து துபாய் சென்றுள்ள இந்த நபர் அங்கிருந்து, இன்று அதிகாலை 12.50 அளவில் கட்டுநாயக்க வந்துள்ளார்.

இந்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அதிகாரிகள் நீண்ட நேரம் அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரும் பிரித்தானிய பிரஜைகளை போல் சரளமாக பிரித்தானிய ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார். தனது மனைவியை பார்க்க பிரித்தானியா செல்வதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் சந்தேக நபரிடம் இருந்த பிரித்தானிய கடவுச்சீட்டை பெற்று விசேட தொழிற்நுட்ப கருதிகள் மூலம் பரிசோதித்துள்ளனர்.

அப்போது பிரித்தானிய கடவுச்சீட்டி உள்ளடக்கப்படும் விசேட பாதுகாப்பு அடையாளம் அதில் இருக்கவில்லை என்பதால், அது போலி கடவுச்சீட்டு என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஈராக் பிரஜையின் பயண பொதியை சோதித்த போது டி சேர்ட்டில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்த ஈராக் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பின்னர், விசாரணைகளை நடத்திய அதிகாரிகள், ஈராக் கடவுச்சீட்டு மீண்டும் துபாய் நாட்டுக்கு நாடு கடத்துவதற்காக ஈராக் பிரஜையை துபாய் விமான சேவையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Latest Offers