சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுநோய் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் சீர்த்திருத்த பயிற்சி பாடசாலையில் இன்று சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.கனிஸ்தீன் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றுள்ளது.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுநோய் தொடர்பான தெளிவினை வழங்கி, கைதிகளுக்கு எயிட்ஸ் தொற்று மூலம் ஏற்படும் நோய்கள் பற்றி தெளிவுப்படுத்தியதுடன் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சிகளும், தெளிவுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.எம்.தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலை அத்தியட்சகர் சமந்த அழகக்கோன் மற்றும் பிரதான புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.