யாழிலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பேருந்தில் பயணிக்கும், சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும், குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார் என்று சாரதியும், நடத்துனரும் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் சிங்களப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளன. அதில் பயணித்த பயணியொருவர் தமிழ் பாடல் இல்லையா எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பயணியை இறக்கிவிட்டனர் என்று பயணியின் தரப்பால் தெரிவிக்கப்பட்டது

Latest Offers