மன்னாரில் எல்லை தொடர்பில் முறுகல்: பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகரசபையின் தலைவர் மற்றும் பிரதேசசபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.

மன்னார் நகரசபைக்கும், பிரதேசசபைக்கும் இடையில் எல்லை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மன்னார் பொலிஸாரினால் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக தெரிவித்து மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் நகரசபையின் தலைவர், மன்னார் பிரதேச சபையின் தலைவர், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா, இரு தலைவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers