புத்தாக்க விவசாய வியாபார தொழில் முயற்சிகளுக்கு ஆதாயம் அளிக்கும் நல்வாய்ப்புக்கள்

Report Print Rusath in சமூகம்

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், புத்தாக்க விவசாய வியாபார தொழில் முயற்சிகளுக்கு, ஆதாயம் அளிக்கும் நல்வாய்ப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் மேற்படி அமைச்சினால் புத்தாக்க விவசாய வியாபார தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் நேற்றும், இன்றும் மட்டக்களப்பு கச்சேரியில் நேர்முக தேர்வு இடம்பெற்றுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை நடத்தியிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டு தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

Latest Offers