யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் - நபர் ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Vethu Vethu in சமூகம்

வட மாகாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 52 வயதான ஜீவகடாட்சம் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடும் வெப்பத்தால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் கடும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest Offers