மட்டக்களப்பில் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இன்று பகல் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யும் நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பக்கச் சார்பாக நடந்துள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இளம் வீரர்களை புறந்தள்ளி ஓய்வுநிலையில் உள்ளவர்களைக் கொண்டு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினை பதிவு செய்துள்ளதாகவும், தற்போது கழகத்திற்காக விளையாடிவரும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவருக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது குறித்து பிரதேச செயலாளர் எம்.தயாபரன் கருத்து தெரிவிக்கையில்,

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் தவறான நடவடிக்கையே இந்த செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதில் ஏதேனும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதுபவர்கள் அது தொடர்பில் நீதிமன்றுக்கு சென்று தெளிவடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers