பட்டமளிப்பு விழாவில் பிரதமர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பில் சமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று குறித்த பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூகப்பணி பட்டம், சமூக முதுமானி, டிப்ளோமா போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் அமைச்சர்களான தயாகமகே, செய்யித் அலிசாஹிர் மௌலானா, பல்கலைக்கழக பேராசியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers