திருகோணமலையில் இலவச வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை, மொரவெவ வைத்தியசாலை மண்டபத்தில் இன்று வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் போல் ரொஷான் தலைமையில் இம்முகாம் இடம்பெற்றுள்ளது.
"தந்தை வழியில் நானும்" எனும் தொனிப்பொருளில் இவ் வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 250இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தமது நோய்களை பரிசோதித்து சிகிச்சைகளை பெற்று கொண்டனர்.
வைத்தியரொருவரினால் இவ்வாறான வைத்திய முகாம் இப்பிரதேசத்தில் இலவசமாக நடைபெறுகின்றமை முதலாவது தடவையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.