பொத்துவில் வைத்தியாலை பணியாளர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலை பணியாளர்களினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரொருவர் வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு முரணாகச் செயற்பட்டு வந்ததையடுத்து அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வைத்தியசாலை பணியாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியருக்கு எதிராக 30இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு குந்தகமாக வைத்தியரொருவர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு முரணாக குறித்த வைத்தியர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

இதன் காரணமாக நோயாளர்களுக்கான வைத்தியசாலைப் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது காணப்படுகின்றது.

எனவே பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டு வரும் குறித்த வைத்தியரை இடமாற்றம் செய்யுமாறு கோருகின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரத் திணைக்களத்தின் பிராந்திய மற்றும் மாகாண அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers