யாழில் தாகம் தீர்க்க மென்பானம் வாங்கிய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Sumi in சமூகம்

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தாகம் தீர்க்க கடையொன்றில் வாங்கிய உள்ளூர் மென்பானத்தில் தலைமுடியை ஒத்த பொருள் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உணவருந்திய பின்னர் குறித்த மாணவன் இன்று மதியம் யாழ்.புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார்.

அதனை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார்.

இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில் இருந்து அகற்றிய வேளை உள்ளே சளி போன்ற திரவத்துடன் தலைமுடியை ஒத்த பொருள் காணப்படுவதை கண்டு பேரதிர்ச்சியடைந்துள்ளார்.

இவ்விடயத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்டும் எந்தவொரு திருப்தியான பதிலையும் கூறவில்லை.

இதேவேளை, இது குறித்து உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers