பாதாள உலக குழுக்களுக்கு புலிகளின் ஆயுதங்கள் விற்பனை: சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Report Print Steephen Steephen in சமூகம்

விடுதலைப் புலிகள் வடக்கு, கிழக்கில் புதைத்த துப்பாக்கிகளை பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தனர் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினருக்கே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட 12 பேர் இதற்கு முன்னர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை மீண்டும் பார்வையிடுவதற்காக அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கிடைத்த இரகசியமான தகவல் ஒன்றுக்கு அமைய சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஒரு சந்தேக நபரின் கிளிநொச்சியில் உள்ள வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டு ஒன்றை தாம் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

Latest Offers