வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகர கிராம அலுவலகர் அலுவலகத்தில் வவுனியா கற்குழி குறிஞ்சி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார், முன்னாள் நகரசபைத்தலைவர் எஸ்.ஜி.நாதன், மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் பத்மரஞ்சன், பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுபாஜினி சிவதர்சன், கிராம அலவலகர் உமாபதி, பெண்கள், மாதர் அமைப்புக்கள் பொதுமக்கள் சிறுவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers