பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது!

Report Print Jeslin Jeslin in சமூகம்

பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ - கொட்டியாகலை மற்றும் பொகவந்தலாவ தெரேசியா ஆகிய தோட்டப் பகுதியிலேயே இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது தெரேசியா தோட்ட பகுதியில் நீர் இறைக்கும் மோட்டாரினை இயக்குவதற்காகப் பயன்படுத்த பட்ட 1000 மீற்றர் அளவினை கொண்ட வயர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொகவந்தலாவ, பலாங்கொட, இரத்தினபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயா பகுதியிலே இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers