போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் சந்தேக நபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்குறனை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே ஹேரொயினுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers