மூதூர் பகுதியில் மோசமான செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து ஐந்து பவுன் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால நகர்,மூதூர்,பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மூதூர் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தங்கச் சங்கிலியை திருடியுள்ளதாக சந்தேக நபருக்கெதிராக வீட்டு உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக மூதூர் பகுதியில் நகை திருட்டுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers