மீன்பிடித் திணைக்கள பணிப்பாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவசர வேண்டுகோள்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் கினிகே பிரசண்ணவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் தாமதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இது சம்பந்தமாக இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கலந்துரையாடிய பின் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.